கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி' திரைப்படம் எப்படி இருக்கிறது? முதல் விமர்சனம் இதோ

 



ஒவ்வொரு முறையும் இவருடைய திரைப்படத்தை பார்க்கும்போது நமக்கு ஆச்சரியமும், வியப்பும் வரும். அந்த அளவிற்கு தனது திரைப்படத்திற்காக உழைக்கக்கூடியவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். Interstellar, Inception, The Dark Knight, Dunkirk என பல ஆகச்சிறந்த படைப்புகளை இவர் இயக்கியுள்ளார்.

அடுத்ததாக இவர் இயக்கத்தில் உருவாகி நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கும் திரைப்படம்தான் 'தி ஒடிசி'. இப்படத்தில் டாம் ஹொலண்ட், Matt Damon, Anne Hathaway, ஜென்டயா ஆகியோர் நடித்துள்ளனர்.

ட்ரோஜன் போருக்குப் பிறகு, இத்தாக்காவின் (Ithaca) கிரேக்க மன்னரான ஒடிஸியஸ் பல ஆபத்தான சாகசங்களை கடந்து, தனது சொந்த நாட்டிற்கு திரும்பவும், தன் மனைவியான பெனிலோப்பை சந்திக்கவும் மேற்கொள்ளும் நீண்ட மற்றும் ஆபத்தான பயணத்தை மையமாக வைத்துத்தான் இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் பிரீமியர் (premiere) கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்றது. இதில் படத்தை பார்த்தவர்கள் தங்களது முதல் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். இதில் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளனர். மேலும், தி ஒடிசி தான் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் தலைசிறந்த படைப்பு என்றும் கூறியுள்ளனர்.

ஒருபுறம் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தாலும், மறுபுறம் திரைப்படத்தின் மீதமான விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக சிலர் இப்படம் தங்களது ஏமாற்றத்தை தந்துள்ளது என்று கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





Post a Comment