தர்மன் படத்தில் ரஜினிக்கு வைத்த முதல் ஷாட்.. ஸ்பாட்டிலேயே விசில் அடித்த இயக்குநர்.. சம்பவம் தரம்

 



ரஜினிகாந்த் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் தர்மன். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்க; அனிருத் இசையமைக்கிறார். 

பெரிய இழுபறிக்கு பிறகு இந்தப் படத்தின் இயக்குநராக அஷ்வத் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பேசியிருக்கிறார் இயக்குநர்.

ரஜினியை வைத்து கமல் தயாரிக்கும் படத்தின் இயக்குநர்களாக முதலில் சுந்தர்.சியும், பிறகு சிபி சக்கரவர்த்தியும் கமிட் ஆனார்கள். அறிவிப்பெல்லாம் வந்ததுதான். 

ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அவர்கள் இரண்டு பேருமே வெளியேறிவிட்டார்கள். 

அவர்கள் வெளியேற்றத்தைத் தொடர்ந்து டிராகன் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை இயக்குநராக ஓகே சொல்லிவிட்டார்கள் ரஜினியும், கமலும். அவர் சொன்ன கதை இரண்டு பேருக்குமே பிடித்துப்போனதால் ஒருமனதாக இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் இசையை பொறுத்தவரை வழக்கம்போல் அனிருத்தான். 

நடிகைகளை பொறுத்தவரை இப்போதைக்கு சிம்ரனும், ராஷி கண்ணாவும் கமிட்டாகியிருக்கிறார்கள். ஏற்கனவே ரஜினியுடன் பேட்ட படத்தில் சிம்ரன் நடித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

 இவர்கள் தவிர்த்து மீனாட்சி சௌத்ரியும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார் என்றும்; அவர் கமிட்டாகியிருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.






Post a Comment