விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை பிரபல நடிகரா.. இதோ பாருங்க


 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் சீரியலில் நடித்து வருபவர் நடிகை ஆர்த்தி சுபாஷ். இவர் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து பிரபலமானார்.

சின்னத்திரையில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஆர்த்தி சுபாஷ், தனது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் பவன் மற்றும் நடிகை ஆர்த்தி சுபாஷ் காதலித்து வந்த நிலையில், தற்போது இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த பதிவில் "From ‘me’ to ‘we.’ To the best decision of my life and the best person in it. Here’s to forever" என குறிப்பிட்டுள்ளார் நடிகை ஆர்த்தி சுபாஷ். இந்த ஜோடிக்கு ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Post a Comment