நடிகை சமந்தா, கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பொதுவாக கர்ப்ப காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது வழக்கம். ஆனால், சமந்தா வெயிட் லிப்டிங் மற்றும் ஸ்ட்ரென்த் டிரெய்னிங் மேற்கொண்டு வருவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ள சமந்தா, பல ஆண்டுகளாக ஸ்ட்ரென்த் டிரெய்னிங் செய்து வருவதாகவும், மருத்துவரின் அனுமதியுடனும், கர்ப்ப காலப் பயிற்சிகளில் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடனும் மட்டுமே பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொருவரின் உடல்நிலையும் கர்ப்ப காலமும் மாறுபடும் என்பதால், மருத்துவர் மற்றும் முறையான பயிற்சியாளரின் ஆலோசனையின்றி தனது உடற்பயிற்சிகளை யாரும் பின்பற்ற வேண்டாம் என்றும் சமந்தா அறிவுறுத்தியுள்ளார்.
சமந்தாவின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
