தனுஷ் எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பில் ரசிகர்கள்

அரசியலில் களமிறங்குவதற்கான முன்னேற்பாடுகளில் நடிகர் தனுஷ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் தனுஷ் தனது ரசிகர் மன்றத்துக்கான புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் நோக்கில் கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், கோவையில் ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொகுதி வாரியான உறுப்பினர் சேர்க்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இதே முறையைப் பின்பற்றி தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவரது ரசிகர்களுடன் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தங்களது மன்ற நிர்வாகிகளும் தற்போது அரசியலில் இறங்க ஆர்வம் காட்டி வருவதாகவும், அதற்கு தனுஷ் ஊக்கமளித்து வருவதாகவும் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

அதேவேளை, அடுத்த ஆண்டுடன் தனுஷ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த நிகழ்வை பிரம்மாண்டமாகக் கொண்டாடவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாகவே ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கையை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தனுஷின் அரசியல் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது

Post a Comment