நான் மொட்டையடிக்கிறேன்! நடிகையின் அதிரடி முடிவு – காரணம் என்ன?

பொதுவாக நடிகைகள் தங்களது தோற்றத்தை அழகாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள். குறிப்பாக தலைமுடியை அழகாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.

ஆனால், தற்போது ஒரு நடிகை தனது தலைமுடியை முழுமையாக அகற்றப் போவதாக கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது வெளியாக தயாராகி வரும் திரைப்படம் ‘சஹா – லைஃப் ஆஃப் சஞ்சு’.

நிஷாந்த் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்வேதா லக்ஷ்மணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி சமீபத்தில் படக்குழுவினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஸ்வேதா லக்ஷ்மணன் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது தனது தலைமுடி தொடர்பாக பேசிய அவர், தனது தலைமுடியை அகற்றுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நடிகைகள் தங்களது தலைமுடியை அழகின் முக்கிய அடையாளமாகக் கருதும் நிலையில், ஸ்வேதா லக்ஷ்மணனின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ஏன் தலைமுடியை அகற்றப் போகிறார்? இதற்குப் பின்னால் திரைப்படத்திற்கான காரணமா அல்லது தனிப்பட்ட காரணமா? என்பதே தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

Post a Comment