நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜீவாவின் 47-வது படமாக உருவாகி வரும் இப்படம், சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜீவா – ராஜேஷ் கூட்டணி மீண்டும் இணையும் படமாக அமைந்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதற்கு முன்பு இவர்களது கூட்டணியில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலரும் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஜீவா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.png)