படம் நடிப்பதில் பிரியாவின் அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர், தற்போது தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

அருள்நிதியுடன் அவர் இணைந்து நடித்துள்ள ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தனது படத் தேர்வு குறித்து பேசிய பிரியா பவானி சங்கர், “நான் அதிகளவில் படங்களை ஒப்புக்கொள்வதில்லை. தனித்துவமான கதைகளில் நடித்து ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். எனக்கு பெரிய பொறுப்பு இருப்பதாக கருதுகிறேன். அதனால் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “திரைப்பயணத்தில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன். எனது படங்களை குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதில் இருந்து நான் ஒருபோதும் மாறமாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment