இன்ஸ்டாகிராமில் கலக்கும் பிரபலம் இப்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினா?

கேரளாவைச் சேர்ந்த பிரபல Instagram Influencer அமலா ஷாஜி, தற்போது தனது அடுத்த கட்ட பயணமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள அமலா ஷாஜி, இளம் வயதிலேயே மில்லியன் கணக்கான Followers-களை பெற்றுள்ளார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது அவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகவுள்ள அவரது 26-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

‘சிறை’ திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார்.

மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகை சிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இதனுடன், முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அமலா ஷாஜியும் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் இதுவரை சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த அமலா ஷாஜி, தற்போது தமிழ் சினிமாவிலும் தனது பயணத்தை தொடங்க உள்ளார்.

ஏற்கனவே அவரை சமூக வலைத்தளங்களில் பின்தொடரும் ரசிகர்கள் அதிகம் என்பதால், அவரது சினிமா அறிமுகம் குறித்த அறிவிப்பு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஆனால், படத்தில் அமலா ஷாஜி எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்? அவரது கதாபாத்திரம் கதையில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது? என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதனால், சமூக வலைத்தளங்களில் பிரபலமான அமலா ஷாஜி, வெள்ளித்திரையில் எப்படி களமிறங்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Post a Comment