நடிகர் சூர்யாவின் 50-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கும் ‘சூர்யா 47’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து த.செ. ஞானவேல் இயக்கும் ‘சூர்யா 48’ மற்றும் எச். வினோத் இயக்கும் ‘சூர்யா 49’ ஆகிய படங்களிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூர்யாவின் 50-வது படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் என்றும், இது லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இடம்பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ‘விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்திருந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனால் சூர்யாவின் 50-வது படத்திற்கு ‘ரோலக்ஸ்’ என பெயர் வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
