சத்தமே இல்லாமல் அடுத்த சம்பவத்தை ஆரம்பித் மாரி செல்வராஜ்..! வெளியான போட்டோஸ்

பைசன் காளமாடன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படம் ‘மஞ்சணத்தி’.

மாரி செல்வராஜின் அடுத்த படைப்பாக உருவாகும் இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதை குறித்த தகவல்கள் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். எழில் அரசு.கே ஒளிப்பதிவு பணிகளையும், செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில், ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று, செப்டம்பர் 7-ஆம் தேதி, பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.







Post a Comment