நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவரும் தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள்.
இருவரும் தனிப்பட்ட முறையில் நட்புடன் இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் மத்தியில் போட்டி என்பது தொடர்ந்து இருந்து வந்தது.
ஆனால் தற்போது அஜித் கார் ரேஸிலும் ,விஜய் அரசியலிலும் என இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் ரேஸில் விஜய் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது அஜித்தை பார்த்ததும் விஜய் ஓடிச்சென்று அவரை கட்டியணைத்துள்ளார்.
இருவரும் சந்தித்துக்கொண்ட இந்த நெகிழ்ச்சியான தருணம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகின்றன.
பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த அஜித் – விஜய் போட்டிக்கு மத்தியில், இருவரும் நட்புடன் சந்தித்துக்கொண்ட இந்த காட்சி இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில், இரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் விஜய் திடீரென ரேஸ் உடையில் தோன்றியுள்ளார்.
நண்பர் அஜித்தைப் போலவே விஜய்யும் ரேஸ் காரை ஓட்டி பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் கார் ரேஸிலும், விஜய் அரசியலிலும் என இருவரும் வெவ்வேறு துறைகளில் பயணித்து வரும் நிலையில் லண்டனில் இருவரும் சந்தித்துக்கொண்ட இந்த தருணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
