சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது படத்திற்கு கூடுதலாக 500க்கும் மேற்பட்ட திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமான சூரி, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக புதிய அவதாரம் எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில், மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள திரைப்படம் ‘மண்டாடி’
இந்தப் படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
‘மண்டாடி’ திரைப்படத்திலிருந்து ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ உள்ளிட்ட பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
குறிப்பாக ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் சூரியின் நடனம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட திரைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரி கதாநாயகனாக நடித்த திரைப்படங்களுக்கு தொடர்ந்து கிடைத்து வரும் வரவேற்புக்கு இது மற்றுமொரு சான்றாக பார்க்கப்படுகிறது.
இதனால் ‘மண்டாடி’ திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
