பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் வெடித்து வருகின்றன.
அந்த வகையில், இந்த வாரமும் போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து விஜய் சேதுபதி நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்தார்.
“இது நம்ம லீடர் கொடுத்த வாக்குறுதி. அவர்கள் கொடுத்த வாக்குறுதியைப் போலத்தான் இந்த வாரம் இருந்ததா?” என விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முனியம்மா, “இல்ல சார். மன்னராட்சியாக நான் நடந்துகொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டு, மன்னராட்சியாகத்தான் நடந்துகொண்டார். சரியான முடிவு என்பதே அவர்களிடம் இல்லை.
இதையடுத்து விஜய் சேதுபதி லக்ஷ்மி பிரியாவிடம் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த லக்ஷ்மி பிரியா ஒரு அநியாயம் நடக்கும்போது, அந்த இடத்தில் அதை கேட்பதற்கு அவர்கள் இல்லை” என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“அப்ப நீங்க செய்யல. கவுந்து போச்சு உங்க ஆட்சி. நீங்க கொடுத்த வாக்குறுதிப்படி நடந்துகிட்டீங்களா, இல்லையா? ஏன் நடக்க முடியல?” என விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் சேதுபதியின் இந்த அதிரடியான கேள்வியால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே போட்டியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வார எபிசோடில் விஜய் சேதுபதி கேட்கும் கேள்விகளும், போட்டியாளர்களின் பதில்களும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
.png)
.png)