விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதியானால்... ஜீவனாம்சம் இத்தனை கோடி கொடுக்கணுமா?



 நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். 

மேலும் தனக்கு ஜீவனாம்ச தொகையை வழங்க வேண்டும் எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் இணையத்தில் புயலையே கிளப்பி வருகின்றது.

இந்நிலையில், விஜய் - சங்கீதா திருமண விவாகரத்து வழக்கில் தீர்ப்பு சங்கீதாவுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் ஜீவனாசம்சமாக சங்கீதாவுக்கு விஜய் எவ்வளவு தொகையை கொடுக்க வேண்டும் என்ற விடயம் குறித்து இணையத்தில் வைரலாகியுள்ளது.

விஜய் - சங்கீதாவின் 27 ஆண்டு மண வாழ்க்கை முடிவுக்கு வரப்போகும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சங்கீதாவை திட்டிவருகின்றனர். 

ஒரு சாரார் இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை இது குறித்து பொது வெளியில் பேசுவது தவறு என சாடிவருகின்றனர்.

இந்த விடயம் இணையத்தில் பெரும் அதிவலைகளை தோற்றுவித்துள்ள நிலையில், விவாகரத்து வழக்கு சங்கீதாவுக்கு சாதகமாக வந்தால், விஜய் எத்தனை கோடியை சங்கீதாவுக்கு ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டி இருக்கும் என சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

விஜய் தனது சொத்துகளில் 50 சதவீத தொகையை ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டியிருக்குமா? என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. 

இந்திய , ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு - பிரமிளா ஸ்ரீனிவாசன் விவாகரத்து வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ரூ.15,000 கோடி ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

 இந்தியாவின் மிக உயர்ந்த விவாகரத்து ஜீவனாம்ச தொகையாக இது அறியப்படுகின்றது. 

பாலிவுட் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் தனது மனைவியை விவாகராத்து செய்ததில் ரூ.380 கோடியை ஜீவனாம்சமாக கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தகவல்களின் அடிப்படையில், நடிகர் விஜயின் சொத்து மதிப்பு சுமார் 600 கோடிக்கும் மேல் இருக்கும்.இந்நிலையில் இவர் விவாகரத்து உறுதியானால் 50 சதவீத தொகையை ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டுமா? என்று கேட்டால் இதற்கு நேரடியாக பதில் கொடுத்துவிட முடியாது.

காரணம் இந்தியாவை பொருத்தமட்டில் மனைவியை விவாகரத்து செய்தால், கணவரின் சொத்தில் 50% மனைவிக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்த்தில் குறிப்பிடப்படவில்லை.

1995-ம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் கீழ், திருமணத்திற்கு முன்பு ஒருவருக்குச் சொந்தமான சொத்து அல்லது அவரது பெயரில் வாங்கப்பட்ட சொத்து அவருக்குச் சொந்தமானது என்கிறது.

நீதிமன்றி விசாரணைகளில் யார் எவ்வளவு சம்பாதித்தார்கள்? வீட்டை யார் நிர்வகித்தார்கள்? குழந்தைகளின் தேவைகள் என்ன? வாழ்க்கை முறை செலவு எப்படிபட்டது? போன்ற பல விடயங்களை கருத்தில் கொண்டு தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

 எனவே இந்த வழக்கிலும் இத்தனைய விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.

இந்த விடயத்தில் சங்கீதா ஜீவனாம்சமாக எவ்வளவு கேட்கின்றார் என்பதை உறுதிசெய்த பின்னும் முறையான நீதிமன்ற விசாரணைகளின் "நியாயமான மற்றும் பொருத்தமான" தொகையை நிர்ணயிக்க முடியும். இந்த விதிகள் ஒவ்வொரு வழக்குக்கும் மாறுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அணிந்த புடவையின் விலை என்ன தெரியுமா?

 


தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நட்சத்திர ஜோகளில் டாப்பில் இருப்பவர்கள் தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா.

கீதா கோவிந்தம் என்ற படத்தில் முதன்முறையாக இருவரும் ஜோடியாக நடிக்க இவர்களுக்கு அந்த படம் செம ஹிட் கொடுத்தது. 

அப்படம் செம ஹிட்டடிக்க மீண்டும் இருவரும் Dear Comrade படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தார்கள்.

அதன்பின் இருவரும் ஒன்றாக பல இடங்களில் காணப்பட ரசிகர்கள் இவர்கள் காதலிக்கிறார்கள் என கூறி வந்தனர், ஆனால் அவர்கள் பக்கத்தில் இருந்து ஒரு அறிவிப்பும் வந்தது இல்லை

கடந்த சில வாரங்களாக விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மற்தனா இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என சமூக வலைதளங்களில் நிறைய செய்திகள் வந்தாலும் அவர்கள் வாய் திறக்காமல் இருந்தனர்

திருமண ஏற்பாடுகளை எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் அமைதியாக செய்து வந்தனர்.

 திருமணத்திற்கு சில தினங்கள் முன்பு தான் திருமணம் பற்றி அறிவித்தார். 

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர்.

 தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணத்தின் போது அணிந்த புடவையின் விலை குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வலம் வருகிறது.

திருமணத்தில் அணிந்துவந்த பாரம்பரிய திருமண புடவையின் விலை ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருக்குமாம். மொத்த அலங்கார செலவு ரூ. 8 முதல் ரூ. 15 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

ராஷ்மிகா உடன் புது வீட்டில் குடியேறும் விஜய் தேவரகொண்டா..

 


விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா திருமணம் உதய்பூர் அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக சில தினங்கள் முன்பு நடந்து முடிந்தது.

வரும் மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அழைப்பு பெறப்பட்டவர்கள் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும் என்றும், வேறு யாரும் வர வேண்டாம், அனுமதி இல்லை என அறிவித்து இருக்கின்றனர்.

திருமணம் முடிந்து ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஒன்றாக புது வீட்டில் குடியேற இருக்கிறார்களாம்.

அந்த வீடு திருமண கொண்டாட்டத்திற்காக அலங்கரிக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதோ பாருங்க.

நடிகை தேவதர்ஷினி மகளா இது.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

 


பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகள் நியதி 96 படத்திலேயே நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சமீபத்தில் ஹாட்ஸ்டார் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். அதற்க்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

இந்நிலையில் நியதி ட்ரெண்டி லுக்கில் போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.

கார் முன் நின்று போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ பாருங்க.

விஜய்காக பாடியதால் இப்படி செய்வீங்களா..

 



நடிகர் விஜய்யின் கட்சி நிகழ்ச்சியில் சென்று பாடியபோது பாடகர் வேல்முருகன் உடன் விஜய் இணைந்து நடனம் ஆடி இருந்த வீடியோ வைரல் ஆகி இருந்தது.

அதற்கு பிறகு முருகன் பாடலை அவமதித்துவிட்டார் என வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் காட்டமாக பேசி இருக்கிறார்.

பாடுனதுக்கு எல்லாம் கேஸ் போடுவாங்களா என அப்போது நான் நினைத்தேன். சிலர் தங்கள் எண்ணம் போல பேசினார்கள். நான் இரண்டு நாள் அறையை விட்டே வெளியில் வரவில்லை.

பெரிய கச்சேரிக்கு போனால் பாடவே பயமாக இருக்கு. நான் எந்த காட்சியிலும் இல்லை. நான் எல்லாருக்கும் பொதுவானவன்.

ஒருத்தன் நல்லா இருக்க கூடாது, அப்படி இருந்தால் எதாவது செய்யணும் என செய்கிறார்கள். உடன் இருந்த என் பெண் குழந்தை என்று கூட பார்க்காமல் அப்படி பேசுகிறார்கள் என காட்டமாக பேசி இருக்கிறார் வேல்முருகன்.

ஹாட் லுக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் போட்டோஷூட்

 


நடிகை ஸ்ருதி ஹாசன் கடைசியாக தமிழில் கூலி படத்தில் ரஜினி உடன் நடித்து இருந்தார். மேலும் அவர் தெலுங்கிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். 

அவர் தற்போது சளார் 2ம் பாகம் உட்பட பல படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் ஹாட் உடையில் கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். 

அப்பாவை Unfollow செய்தாரா விஜய் மகன்?

 


நடிகர் விஜயின் மகன் யேஜப் சஞ்சய் அவருடைய அம்மாவிற்கு முழு ஆதரவாக செய்த செயல் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

கிரகலங்களுக்குள் ஒரு பிரச்சனை நடந்து விட்டால் அதை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி விடுவார்கள். குறிப்பாக பிரபலங்களின் ரசிகர்கள் அவர்களின் செயலை எப்போதும் கவனித்துகொண்டே இருப்பார்கள்.

இந்த நிலையில் தான் நடிகர் விஜய் நடிப்பை விட்டு தற்போது அரசியலில் இறங்கி உள்ளார். அப்படி இருக்கையில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு கோர்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் பலவி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சங்கீதா அதாவது விஜய் மனைவி குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவர்களுடைய விவாகரத்து ஏப்ரல் 20 தாம் திகதி மறு விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படி ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் மகன் சஞ்சய் தன்னுடைய அப்பாவை அன்போலோவ் செய்துள்ளார்.

ஜேசன் சஞ்சய் தனது தந்தையை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது. 

சிலர் கூறுகின்றனர் ஏற்கனவே ஜோசப் தன்னுடைய தந்தையான விஜயை பின்தொடரவில்லை. 

அவர் இப்போது தான் தொடர்வதை நிறுத்தி விட்டார் என யார் சொன்னது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 இதில் உண்மையில் சஞ்சய் Unfollow செய்தாரா இல்லை முதலில் இருந்து follow பண்ணவில்லையா என்பது சஞ்சய் சொன்னால் மட்டுமே தெரியும்.

விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!



நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். குறித்த விடயம் இணையத்தில் புயலையே கிளப்பி வருகின்றது.

விஜய் - சங்கீதாவின் 27 ஆண்டு மண வாழ்க்கை முடிவுக்கு வரப்போகும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சங்கீதாவை திட்டிவருகின்றனர். 

ஒரு சாரார் இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை இது குறித்து பொது வெளியில் பேசுவது தவறு என சாடிவருகின்றனர்.

இந்நிலையில்,தளபதி விஜயின் ரசிகையொருவர் விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சை குறித்து காரசாரமாக பேசிய காணொளியை, சினிமா விமர்சகர், ப்ளூ சட்டை மாறன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த பெண் அதில் குறிப்பிடுகையில், தளபதிக்கு பொண்டாட்டியா நாங்க நிப்போம் என குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சட்டம் சொல்வது என்ன?

 


விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் இதன்படி சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலக முன்னணி நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்க்கு எதிராக அவருடைய மனைவி சங்கீதா நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என விவாகரத்து மனு செங்கல்பட்டு குடும்ப நல கோர்டில் தாக்கல் செய்துள்ளார்.

சுமார் 27 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் சங்கீதா இந்த முடிவை எடுத்துள்ளார். நடிகர் விஜய் சஙீதாவை 1998 ஜூலை 10ஆம் தேதி இங்கிலாந்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னை எக்மோர் ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்திய டகாலத்தில் இருந்து விஜய் பல சர்ச்சைகளில் மாட்டி உள்ளார். இந்த நிலையில் சங்கிதா டிசம்பரில் தாக்கல் செய்த மனு ்தற்போது எப்படியே வெளியாகி மக்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றது.

சங்கீதா 12 பக்க மனுவில் விஜய் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது குடும்ப விடயம் என்பதால் இதை சமூக வலைத்தளத்திற்கு கொண்டு போக கூடாது என்றும் மூடப்பட்ட அறையில் தான் விசாரணை நடக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

1954 சட்டத்தின் பிரிவு 27ன் கீழ் திருமண வாழ்வில் துரோகம் இழைத்தல், கட்டிய மனைவியை கைவிடுதல், உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய திருமணச் சட்டத்தின் பிரிவு 27 (1) (b) படி, கணவன் அல்லது மனைவி ஒருவரை ஒருவர் உடல் அல்லது மன ரீதியாக கொடுமைப்படுத்தினால் அது விவாகரத்துக்கான காரணமாக கருதப்படும்.

அடித்தல், காயப்படுத்துதல், திட்டுதல், அவமானப்படுத்துதல், தொடர்ந்து மன அழுத்தம் கொடுத்தல், குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்துதல் போன்ற செயல்கள் “கொடுமை” எனப் பார்க்கப்படும்.


இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம்.


இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் மனுவில் குறிப்பிட்டு சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்து கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

திரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்

 


நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதால், சங்கீதா குறிப்பிடும் நடிகை த்ரிஷா தான் என இணையத்தில் வேகமான கருத்துக்கள் வலம் வருகின்றது.இந்நிலையில், பாடகி சுசித்ரா குறிப்பிட்டுள்ள விடயம் இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.

விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் திருமணம் ஆகி 27 வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

 மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார்

நடிகர் விஜய் முற்றிலும் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டுவருகின்றார்.

 இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள விடயம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதால், குறித்த நடிகை த்ரிஷாவாக தான் இருக்கும் என இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பாடகி சுசித்ரா இது குறித்து பிரபல ஊடகத்துக்கு வழங்கியுள்ள பேட்டியில், த்ரிஷாவின் காதல் விஜயுடன் கிடையாது.

 விஜய் வேண்டுமானால் த்ரிஷாவை காதலிக்கலாம் ஆனால் த்ரிஷா காதலிப்பது தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆன,உதயநிதி ஸ்டாலினை தான் என புதிய புயலை கிளப்பியுள்ளார்.

த்ரிஷா மற்றும் உதயநிதி ஸ்டாலின் காதல் அமர காதல் இவர்கள் இருவரும் திருமணத்தையெல்லாம் தாண்டிய காதல் உறவில் இருப்பதாக பகிரங்கமாக பேசிய காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

பாபநாசம் பட குட்டி பொண்ணா இது?

 


தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை எஸ்தர் அணில் செம ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கொள்ளை அழகில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் எஸ்தர் அணில்.

இந்த திரைப்படத்தில் கமலில் இழைய பெண்ணாக நடித்த இவரின் தத்ரூபமான நடிப்பை யாராலும் மறக்கவே முடியாது.












ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு

 



நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில், அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு தற்போது முழுநேர அரசியலில் இருக்கின்றார்.

இந்த வருடம் வரும் தேர்தலில் இவரது கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. 

ஏனெனில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், வெற்றியை எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். 

நடிகர் விஜய் 1999ம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

திருமணத்திற்கு பின் ரசிகர்களுக்கு மத்தியில் ஜோடியாக ராஷ்மிகா

 

திருமணத்திற்கு பின்னர் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் முதல் முறையாக ஜோடியாக ரசிகர்கள் மத்தியில் வலம்வந்துள்ளார். 

ஆம், இருவரும் உதய்பூர் விமான நிலையத்திற்கு ஜோடியாக வந்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.

இந்நிலையில்,விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் நேற்றைய தினம் உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.

திருமணம் முடிந்த கையோடு திருமண புகைப்படங்களை ராஷ்மிகா மற்றும் விஜய் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தங்களின் மகிழ்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டனர்.

இந்த நிலையில், திருமணத்திற்கு பின் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் முதல் முறையாக ஜோடியாக வெளியுலகில் தலைக்காட்டிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.



திருமணத்தின் பின்னர் இருவரும் உதய்பூர் விமான நிலையத்திற்கு ஜோடியாக வந்த இவர்கள், காரில் இருந்து இறங்கி ஜோடியாக கைகோர்த்து தங்களது ரசிகர்களுக்கு Flying கிஸ் கொடுத்து தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரகுமானை திருமணம் செய்ய ஆசைப்பட்ட பிரபல நடிகை...


ஏ.ஆர்.ரஹ்மானை திருமணம் செய்வதற்கு ஆசைப்பட்டதாக பிரபல நடிகை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தனது ஆசையை தற்போது வெளியே ஓபனாக கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 1987ம் ஆண்டு ரகுவரன் நடிப்பில் வெளியான கூட்டுப்புழுக்கள் படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை மோகினி.

பின்பு ஈரமான ரோஜாவே படத்தில் நடித்து பிரபலமான இவர், நாடோடி பாட்டுக்காரன், உனக்காக பிறந்தேன் என பல படங்களில் நடித்துள்ளார்.

2007ம் ஆண்டில் குற்றப்பத்திரிக்கை என்ற படத்தில் நடித்த அவருக்கு பின்பு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மலையாள படமான கலெக்டர் என்ற படத்தில் 2011ம் ஆண்டு நடித்திருந்தார். இவரது கண்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடிகையுடன் தொடர்பு... விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி சங்கீதா மனு தாக்கல்

 



நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார்.

பிக் பாஸ் சௌந்தர்யா காதலனுடன் நடுவீதியில் பார்த்த வேலை!

 


பிக்பாஸ் புகழ் நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன் தனது காதலன் விஷ்ணுவோடு, நடுவீதியில் குரங்குகளுக்கு உணவு கொடுத்து ஜாலியாக விளைாயடி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானவர் தான் சௌந்தர்யா நஞ்சுண்டன்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நாய்குட்டியால் நின்று போன திருமணம்... ஏமாற்றத்தில் மணமகன்


 இந்தியாவில் நாய்குட்டியால் மணப்பெண் ஒருவர் தனது திருமணத்தையே நிறுத்தியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் மணப்பெண் தான்யா கேசர்வானி. இவரும் சுமித் கேசர்வானி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால் வீட்டை எதிர்த்து கடந்த ஜனவரி மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்பு குடும்பத்தினர் வந்து சமாதானப்படுத்திய தங்களது முறைப்படி திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள காகாகோட்வாலி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

பெண் வீட்டார் திருமண மண்டபவத்திற்கு வந்த நிலையில், தங்களுடன் மணமகளின் செல்லப்பிராணியான நாயையும் அழைத்து வந்துள்ளனர். 

முதல் நாள் திருமண சடங்குகள் அனைத்தும் மகிழ்ச்சியாக நடந்த நிலையில், மறுநாள் காலை நகை அணிவிக்கும் சடங்கு நடைபெற்றுள்ளது.

திருமண மண்டபவத்தின் அருகில் கட்டப்பட்டிருந்த நாய் குரைத்துக் கொண்டிருந்துள்ளது. இதனால் எரிச்சலடைந்த மணமகன் குடும்பத்தை சேர்ந்த இளைஞர் நாயை தாக்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைசியாக வாக்குவாதம் மிகப்பெரிய கைகலப்பாகவும் மாறியுள்ளது.

கம்புகளை வைத்து தாக்கியத்தில் பலருக்கும் காயம ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்பு காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.


மணப்பெண் நாயை அடித்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் திருமணத்தையும் நிறுத்தியுள்ளார். பின்னர் இரண்டு குடும்பத்தினரும் பேசியும் திருமணத்தில் நல்ல முடிவு எடுக்கமுடியவில்லை.

நடிகைகளின் ஆபாச படங்கள் தொடர்பில் சற்று முன் பிரபல நடிகை பகீர்

 


தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடி கையாக கவர்ந்து வருகிறார், அனுபமா பரமேஸ் வரன். சமீபத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து அவர் நடித்த 'பைசன்' படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. இதற்கிடையில் நடிகைகளின் போலி ஆபாச படங்கள் வெளியாவது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளங்களில் நடிகைகளின் போலி ஆபாச படங்களை திட்டமிட்டே வெளியிடுகிறார்கள்.

 இதுபோன்ற விஷம ஆசாமிகளை களையெடுக்க வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற கூடாது. 

இதுபோன்ற கேடுகெட்ட சிந்தனையாளர்கள் தண்டிக்கப்பட்டால் தான், இந்த கேவலமான விஷயங்கள் ஒழிக்கப்படும்" என்று ஆவேசம் தெரிவித்துள்ளார்.

வசூல் எவ்வளவு தெரியுமா?

 

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2016ஆம் ஆண்டு வெளிவந்த படம் தெறி. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். 

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும், நடிகை மீனாவின் மகள் நைனிகா இப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். 

ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 2016ல் வெளிவந்த தெறி படம் உலகளவில் ரூ. 150+ கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றது.

இந்த வாரம் ஓடிடியில் வரும் படங்கள் என்னென்ன.. முழு லிஸ்ட் இதோ

 


ஓடிடியில் வாரம்தோறும் என்ன புது படம் வர போகிறது என ரசிகர்கள் தற்போதெல்லாம் தீவிரமாக காத்திருக்க தொடங்கிவிட்டார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் முக்கிய ஓடிடி தளங்களில் என்ன புது படங்கள் வரப்போகிறது என்கிற பட்டியலை பார்க்கலாம்.

அமேசான் ப்ரைம்

The Bluff - பிரியங்கா சோப்ரா நடித்திருக்கும் இந்த படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அமேசானில் ரிலீஸ் ஆகிறது.

ஜியோ ஹாட்ஸ்டார்

Secret Stories: Roslin - மீனா நடித்து இருக்கும் இந்த வெப் சீரிஸ் வரும் பிப்ரவரி 27ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

நெட்பிலிக்ஸ்

Accused படம்: Konkona Sensharma நடிப்பில் இந்த படம் நெட்பிலிக்ஸ் தளத்தில் வரும் பிப்ரவரி 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது.  

தடயம் 

சமுத்திரக்கனி நடித்திருக்கும் இந்த வெப் சீரிஸ் ஜீ தமிழில் பிப்ரவரி 27ல் ரிலீஸ் ஆகிறது.