சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது பழைய வீட்டை இடித்துவிட்டு, அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அந்த வீட்டில் அவரது தந்தை எஸ்.ஏ.சியின் அலுவலகமும், விஜய் ஆண்டனியின் ஸ்டுடியோவும் இயங்கி வருகின்றன. அண்மையில் அண்ணா நகர் வீட்டை விற்ற விஜய், தற்போது விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான சூழலால் அடுத்தடுத்து சொத்துக்களைக் கையாண்டு வருவதாகத் திரைத்துறையில் பேசப்படுகிறது. ஜூன் 15-ல் இவரது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
