நடிகை த்ரிஷா குறித்து ரம்யாகிருஷ்ணன் பேசிய காணொளி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் தற்போது தனது நடிப்பினால் முன்னணி நடிகையாகவே வலம் வருகின்றார்.
அதே போன்று நடிகை ரம்யாகிருஷ்ணனும் தனது நடிப்பினால் மிரட்டியவர் என்று தான் கூற வேண்டும். படையப்பா படத்தில் வில்லியாக நடித்து இன்றும் மறக்கமுடியாதவராக இருக்கின்றார்.
ரம்யாகிருஷ்ணன், த்ரிஷா இருவருக்கும் இடையேயான நட்பு திரையுலகில் அனைவருக்கும் தெரிந்த விடயம் என்றாலும், அவரை குறித்து ரம்யாகிருஷ்ணன் பேசிய பழைய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா பேச ஆரம்பித்தால் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பதுடன், எந்த நேரத்தில் கூட அவருக்கு கண்ணீர் வரவழைக்க முடியும். அப்படி அழுது பலரையும் ஏமாற்றியுள்ளதாக கூறியுள்ளார்.
ரம்யாகிருஷ்ணனின் இந்த பதிலுக்கு த்ரிஷா அந்த காணொளியில் கொடுத்த பதிலானது, நான் அழும்போது ரம்யா மட்டும் தான் சிரிப்பாங்க என்றும் நான் என்னதான் கவலைப்பட்டு பேசினாலும், அது நாடகம் என்று கலாய்ப்பதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே த்ரிஷா, விஜய் இடையேயான சர்ச்சை சென்று கொண்டிருக்கும் நிலையில், ரம்யாகிருஷ்ணன் த்ரிஷா நட்பின் பழைய காட்சி தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.
