நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது புதிய ஹேர் ஸ்டைலில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா. பல தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை ரக்ஷ்தா காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரச்சிதா பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் மக்களிடையே பிரபலமானார்.
அப்போது ரச்சிதாவை வனிதாவின் முன்னாள் கணவரான ராபர்ட் மாஸ்டர் ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால் வெளியே வந்ததும் இருவரும் தங்களது வேலையை செய்து வருகின்றனர்.
சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் அசத்தி வருகின்றார். இந்நிலையில் அவர் தனதுநீளமான தலைமுடியை வெட்டிவிட்டு செம்ம மாடர்னாக மாறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
