நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நடித்துள்ள புதிய திரைப்படம் ’பாரத் பாக்ய விதாதா’ (Bharat Bhhagya Viddhaata) ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மனோஜ் தபாடியா எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் இன்று (ஜூன் 12) முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பென் ஸ்டூடியோஸுடன் இணைந்து கங்கனா ரணாவத்தின் மணிகர்ணிகா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படம் மும்பை தீவிரவாத தாக்குதல் 26/11 பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் செவிலியர் கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் கங்கனா, கிரிஜா ஓக், ஸ்மிதா தம்பே, ஈஷா டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்துக்கு ஊடகங்களில் மிகுதியான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இதனை தனது எக்ஸ் பக்கத்தில் கங்கனா ரணாவத் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தலைப்புச் செய்திகள் மிளிர்கின்றன. விமர்சனங்கள் கர்ஜிக்கின்றன. இந்தக் கதை தனது அடையாளத்தைப் பதித்துள்ளது. பாரத் பாக்ய விதாதா உலகம் முழுவதும் திரையரங்குகளில் எனக் குறிப்பிட்டுள்ளார்.
