நடிகைகள் பிரியங்கா மோகன், கயாடு லோஹர் ஆகியோர் மஞ்சணத்தி திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் மஞ்சணத்தி. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். மாரியின் முந்தைய படங்களைப் போல இதுவும் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி - திருநெல்வேலி பகுதி கதையாக உருவாகிறது.
இதில், நடிகர்கள் கதிர், கயாடு லோஹர், பிரியங்கா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தில் இணைந்ததை, இவர்களே தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தெரியப்படுத்தியுள்ளனர்.
நடிகை பிரியங்கா மோகன் மேட் இன் கொரியா படத்தைத் தொடர்ந்து அரசனில் நடித்து வருகிறார். அதேபோல், கயாடு லோஹர் டிராகன் படத்திற்குப் பின் மலையாளத்தில் பள்ளிச்சட்டம்பி படத்தில் நடித்தார். அது பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. இவர் நடித்து முடித்துள்ள இதயம் முரளி விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
