நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான அனந்தன் காடு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான மிஸ்டர். எக்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அடுத்ததாக, இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுவும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையே, ஆர்யா தமிழ் - மலையாளப் படத்தில் நடித்து முடித்தார். அனந்தன் காடு எனப் பெயரிடப்பட்டுள்ள இதன் கதை, திரைக்கதையை முரளி கோபி எழுத, ஜியேன் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். காந்தாரா புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், அனந்தன் காடு திரைப்படம் வருகிற ஜூன் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
