நடிகர் துல்கர் சல்மானின் ஐயம் கேம் திரைப்படத்தின் ஓணம் வெளியீட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
கேரளத்தின் மிகப்பெரிய பண்டிகையான ஓணம் வருகிற ஆக்ஸ்ட் மாதம் வருகிறது. ஒருவாரம் வரை விடுமுறைக் கொண்டாட்டத்தில் இருப்பார்கள் என்பதால் பல திரைப்படங்கள் ஓணம் வெளியீட்டை குறிவைத்து தயாராகி வருகின்றன.
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடன் பண்டிகை கொண்டாட்டம் இருப்பதால் வணிக ரீதியாகவும் அப்படங்கள் நல்ல வசூலைப் பெறும்.
இந்த ஓணம் வெளியீடாக நடிகர் துல்கர் சல்மானின் ஐயம் கேம் திரைப்படம் திரைக்கு வருகிறது. நஹாஸ் ஹிதயத் இயக்கத்தில் உருவான இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. அன்பறிவ் சண்டைக் காட்சிகள் என்பதால் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது, இப்படத்தின் ஓணம் வெளியீட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இந்தாண்டு ஓணத்திற்கு நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான கலிஃபா, நிவின் பாலி நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய படங்களும் வெளியாகவுள்ளன.
