ஹார்ட்டின் படத்தின் பாடல் வெளியீடு!

 

ஹார்ட்டின் படத்தின் ஒரு நொடி என்ற பாடல் வெளியாகியுள்ளது.

ஜில் ஜங் ஜக், பேட்டை, மகான் ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் சனந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘ஹார்ட்டின்’. அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மடோனா செபாஸ்டியன், இமையா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

நேரம், பிரேமம் போன்ற மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் ‘ஒரு நொடி’ என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. மோகன் ராஜன் எழுதிய இப்பாடலை ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் பாடியுள்ளார்.

காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 26 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Post a Comment