சிக்மா ஸ்டைல் பாடல்!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் சிக்மா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சிக்மா படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதனை, லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்க, நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகரான இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் இப்படம் உருவாகிறது.

ஆக்‌ஷன் திரைப்படமான சிக்மா வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். தமன் இசையமைப்பில் உருவான இப்பாடலில் ஜேசன் சஞ்சய்யும் நடித்துள்ளார். 

Post a Comment