ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஓ சுகுமாரி'

பரத் தர்ஷன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் நடித்துள்ள ’ஓ சுகுமாரி’ என்ற படத்தின் தமிழ் டீசர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தார். அவரது ‘டிரைவர் ஜமுனா’, ஃபர்ஹானா, புலிமடா, தீராக் காதல் ஆகிய திரைப்படங்கள் அவருக்கென தனியான ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தன.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரது பிறந்த நாளுக்கு இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றிருந்தது.

கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக மஹேஸ்வர ரெட்டி மூலி தயாரித்துள்ள இந்தப் படத்தில் திருவீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜான்சி, முரளிதர் கௌட், ஆமினி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஓ சுகுமாரி எனும் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தீயவர் குலை நடுங்க திரைப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் இவர் அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment