நடிகர் விஜய் ஆண்டனி கிராம வாழ்க்கைக்குத் திரும்ப உள்ளதாகக் கூறியுள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு சாமி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் ஆண்டனியும் நடிகை ஸ்வாசிகாவும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தின் டீசர் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய் ஆண்டனி, “கிராம வாழ்க்கையே சிறந்தது. நகரத்தில் பலரும் மன அழுத்தத்துடன்தான் வாழ்ந்து வருகின்றனர். நான் 3 ஆண்டுகள் கழித்து பொள்ளாச்சி பக்கம் கிராம வாழ்க்கையை வாழ திட்டமிட்டுள்ளேன். அதற்காக நிலத்தை வாங்குவதற்கான முயற்சியில் இருக்கிறேன்” எனக் கூறினார். நூறு சாமி திரைப்படம் கிராம வாழ்க்கையைத் தழுவி உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
