செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி 2. சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.
விமர்சன ரீதியாக குடும்ப ரசிகர்களிடம் ஒர்க் அவுட் ஆகியிருக்கும் அப்படம்; வசூலிலும் சக்கைப்போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு விஷால் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் கட்டா குஸ்தி 2. இதன் முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவுவே இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகை மோக்ஷா, குழந்தை நட்சத்திரம் சாரா உள்ளிட்டோர் இந்தப் பாகத்தில் புதிதாக உள்ளே வந்திருக்கிறார்கள்.
முதல் பாகத்தின் வெற்றி காரணமாக இந்தப் பாகத்தின் மீதும் பெரிய நம்பிக்கை படக்குழுவுக்கு இருந்தது.
அதனால்தான் ரிலீஸுக்கு முன்னரே இயக்குநருக்கு விஷ்ணு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார்.
பத்திரிகையாளர்களிடம் படம் ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அதேசமயம் மக்களிடம் எப்படி எடுபடுமோ என்ற கேள்வியும் இருந்தது.
ஆனால் நல்வாய்ப்பாக ரசிகர்களிடமும் படம் சூப்பராக ஒர்க் அவுட் ஆகிவிட்டது.
பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு படையெடுக்கிறார்கள். இளைஞர்களிடமும் படம் நன்றாகவே கனெக்ட் ஆகியிருப்பதும் கவனிக்கக்கூடிய ஒன்று ஆகும்.
