அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களுக்கு தொண்டர்கள் சென்று புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது என்பது புதிதல்ல.
ஆனால், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற ரசிகர் ஒருவர் எடுத்துள்ள மினி விலாக் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக, அந்த வீடியோவைப் பகிர்ந்து ரசிகர்கள் பதிவிட்டு வரும் கமெண்ட்ஸ்தான் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
வைரலாகும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தை சுற்றிக் காட்டுகிறார்.
இதுதான் தலைமை அலுவலகம்" என்று தொடங்கும் அவர், அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார வாகனத்தையும் காட்டி, "இதுதான் தளபதி விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய வாகனம்" என்று கூறுகிறார்.
அதன்பிறகு அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்சியின் ஐம்பெரும் தலைவர்களின் சிலைகளையும் ஒவ்வொன்றாகக் காட்டி, அவர்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறார்.
தளபதியை நேரில் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.
அலுவலகம் மிகவும் அருமையாக இருக்கிறது" என்றும் அவர் உற்சாகமாக பேசியுள்ளார். அவருடன் வந்திருந்த நண்பர்களும் அந்த இடத்தை வீடியோவாக பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதைப் பகிர்ந்த ரசிகர்கள் பதிவிட்டுள்ள கருத்துகளும் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக ஒருவர் பதிவிட்டுள்ள கமெண்ட் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
