நயன்தாராவா? கியாரா அத்வானியா? டாக்சிக் படத்தில் வெளியான புதிய தகவல்!

யாஷ் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இதனால், பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வசூலில் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், ‘டாக்சிக்’ படத்தில் நடித்த நடிகர்களில் அதிக சம்பளம் பெற்றவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் நடித்துள்ள ஹிந்தி நடிகை கியாரா அத்வானிக்கு ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, ‘கங்கா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நயன்தாராவுக்கு ரூ.12 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கியாரா அத்வானி படத்தின் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிலையில், நயன்தாரா ஒரே ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் மட்டுமே கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment