தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை செப்டம்பர் மாதம் ரசிகர்களுக்கு மிகவும் பரபரப்பான மாதமாக அமைய இருக்கிறது. பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் இந்த மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகின்றன.
குறிப்பாக கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்தின் மீது ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அதே நாளில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படமும் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 11ஆம் தேதி அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 3’ திரைப்படம் வெளியாக உள்ளது. ஹாரர் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் செப்டம்பர் மாதத்தில் ‘Immortal’, ‘4 Idiots’, ‘Sathyavan Savithiri’, ‘Bang Bang’, ‘Don't Trouble The Trouble’, ‘Dorothy’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக செப்டம்பர் 4ஆம் தேதி ஜி.வி.பிரகாஷ் மற்றும் கயாது லோகர் நடித்துள்ள ‘Immortal’ திரைப்படம் வெளியாகிறது.
அதனை தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ‘Dorothy’ உள்ளிட்ட படங்களும் திரையரங்குகளை நோக்கி வருகின்றன.
இதனால் இந்த செப்டம்பர் மாதத்தில் காதல், ஆக்ஷன், ஹாரர், திரில்லர், காமெடி என பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களை ரசிகர்கள் பார்க்க முடியும்.
இருப்பினும், தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டு தேதிகளைச் சுற்றி சமீபத்தில் OTT release window தொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
அந்த பிரச்சினை காரணமாக செப்டம்பர் வெளியீடுகள் பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட வெளியீடுகளுக்கு தற்போது ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது.
எனவே செப்டம்பர் மாதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரபரப்பான திரைப்பட மாதமாக அமையப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.
.jpg)