ஹாலிவுட்’ படங்களை பார்த்து ஏங்குவதை விட, அதுபோன்ற முயற்சிகளை தமிழிலும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ‘சர்தார் 2’ உருவாக்கப்பட்டுள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்தில், முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகளும் இடம்பெறும் என கார்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், ‘சர்தார் 2’வில் வலுவான சமூக கருத்தும் விழிப்புணர்வும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், குறிப்பாக பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான முக்கியமான விழிப்புணர்வை படம் ஏற்படுத்தும் என்றார்.
மாளவிகா மோகனன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிப்புடன் ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளதாகவும், ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல ஆக்ஷன் விருந்தாக இருக்கும் என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார்.
‘சர்தார் 2’ நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
