தமிழக முதலமைச்சர் விஜய், எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி லண்டன் செல்லவுள்ளதாக கூறப்படும் நிலையில், அங்கு கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித்தை நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, அஜித்தும் லண்டனில் நடைபெறும் கார் பந்தயத்தில் தனது அணியுடன் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விஜய், அஜித்தை நேரில் சந்திக்கலாம் என்றும், அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை விஜய் பார்வையிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மோட்டார் சிட்டி அமைக்கப்படும் என விஜய் அறிவித்திருந்த நிலையில், அதற்கு அஜித் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும், மலேசிய பிரதமரின் சென்னை வருகை காரணமாக விஜய்யின் லண்டன் பயணத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் – அஜித் சந்திப்பு நடைபெறுமா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
