மூக்குத்தி அம்மன் 2ல் இப்படியொரு சர்ப்ரைஸா? டீசரில் திக்குமுக்காடிய ரசிகர்கள்

நயன்தாரா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ஆனால், இந்த முறை படத்தை இயக்கியிருப்பது இயக்குநர் சுந்தர்.சி.

நயன்தாராவுடன் ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில், குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவனும் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

மேலும், படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ‘Rise of Mahasakthi’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

பிரமாண்டமான காட்சிகள், நயன்தாராவின் வித்தியாசமான தோற்றம் என டீசர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் திகதி தீபாவளியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment