அலைபாயுதே படத்திற்காக மாதவனுக்கு வந்த அதிர்ச்சி கண்டிஷன்! இத்தனை வருடத்திற்கு பிறகு வெளியான இரகசியம்

மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷாலினி நடிப்பில் வெளியான ‘அலைபாயுதே’ திரைப்படம் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காதல் படங்களில் ஒன்று.

இந்த படத்தின் ஆரம்ப காலகட்டம் குறித்து நடிகர் மாதவன் தற்போது சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அப்போது தான் திருமணம் செய்திருந்ததால், தனது திருமண வாழ்க்கை குறித்து ஊடகங்களிடம் பேச வேண்டாம் என்று மாதவனிடம் அறிவுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருமணமான கதாநாயகன் என்ற விஷயம் படத்தின் வெற்றியை பாதிக்கலாம் என்ற அச்சம் அப்போது இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் உண்மையை மறைத்து நடிக்க மாதவன் விரும்பவில்லை என்றும், தனது மனைவியை விட்டு விலகி இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மாதவன் பகிர்ந்த இந்த தகவல் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

Post a Comment