Posts

பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி சம்பவம்! தொடரும் கை கலப்பு - நடந்தது என்ன?


பிக்பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கி இரண்டு வாரங்களே ஆன நிலையில், போட்டியாளர்களுக்கு இடையேயான மோதல்களும் பரபரப்பும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற கடுமையான போட்டி ஒன்றின் போது நடிகை ஆனந்தி காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியின் நடுவே, சக போட்டியாளரான லட்சுமி பிரியா, ஆனந்தியை தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ஆனந்தி, வலியால் அழுததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து சக போட்டியாளர்கள் உடனடியாக அவருக்கு உதவி செய்து, டாஸ்க் பகுதியில் இருந்து வெளியே அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, டாஸ்கின்போது பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, இந்த வாரம் ஜாவித் எலிமினேட் ஆக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாவித்தின் எலிமினேஷன் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தெரியவரும் என கூறப்படுகிறது.

Post a Comment