பெற்றோரின் வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்த அசோக் செல்வன்

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதாசிரியராகப் பணியாற்றியுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை, விக்னேஷ் ராஜா, இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

மேலும், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் அசோக் செல்வனும் அவரது சகோதரி அபிராமியும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய அசோக் செல்வன், இந்தப் படம் தனக்கு ஒரு புதிய தொடக்கம் என தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட அதிகரித்ததால், பெற்றோரின் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து படத்திற்குத் தேவையான பணத்தை பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது கனவுக்கு பெற்றோர் உறுதுணையாக இருந்ததற்கு நன்றி தெரிவித்த அசோக் செல்வன், இந்தப் படத்திற்காக 100 சதவீதம் உழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, அசோக் செல்வனின் முதன்மைக் கதாபாத்திரத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது

Post a Comment