நடிகை சமந்தா தற்போது புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், தற்போது சமந்தா ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார்.
திரைப்படங்களில் இருந்து இடைவெளி எடுத்துள்ள சமந்தா, தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழில் சோனி எண்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி நடத்தும் ‘Celebrity MasterChef’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சமந்தா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக சமந்தா சென்னை வந்ததாக கூறப்படுகிறது.
அவர் விமான நிலையத்தில் வந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும், இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய திரையுலக பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
