பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிளாக் பாண்டி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக் பாஸ் சீசன் 10 தொடங்கிய சில நாட்களிலேயே எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய பிளாக் பாண்டி, உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவப் பிரச்சினை காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த அவர், இவ்வளவு விரைவில் வெளியேறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது நிரந்தர வெளியேற்றமா அல்லது தற்காலிக வெளியேற்றமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே, உடல்நிலை சரியான பின்னர் அவரை வைல்டு கார்டு போட்டியாளராக மீண்டும் அழைக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Post a Comment