நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான பிரிவு விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது.
இந்நிலையில், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சூர்யா, அஜித், விக்ரம், கமல் இவங்களைவிட என் வாழ்க்கையில் வந்த ஒருத்தன் நடிச்சானே... நடிப்பு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.
எனினும், இந்தப் பதிவில் அவர் யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை. தற்போதைய சூழ்நிலையை வைத்து, இது ரவி மோகனை மறைமுகமாக விமர்சிக்கும் பதிவு என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ஆர்த்தியின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

