“அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட..” – வசனத்துக்கு பின்னால் இப்படியொரு பின்னணியா?

வாத்தியார்’ படத்தில் இடம்பெற்ற “அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட” என்ற காமெடி வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த வசனம் உருவான பின்னணி குறித்து இயக்குநர் வெங்கடேஷ் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

ஊரில் மழை பெய்யாததால், ஒரு இளைஞர் தொடர்பான பழைய ஐதீகத்தை மையமாக வைத்து காமெடி காட்சி உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் அந்தக் காட்சிக்காக வேறு ஒரு வசனம் எழுதப்பட்டிருந்த நிலையில், அதன் கடைசி பகுதி தேவையில்லை எனக் கூறி, அதை மாற்றியதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வசனத்தின் பின்னணி குறித்த அவரது பேட்டி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Post a Comment