ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராமாயணா படத்தின் முதல் பாடல் வெளியானது!

ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

குமார் விஸ்வாஸ் எழுதியுள்ள இந்த பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும், பிரபல பாடகர்கள் ஸ்ரேயா கோஷல் மற்றும் அர்ஜித் சிங் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.

இந்திய இதிகாசங்களில் முக்கியமானதாக கருதப்படும் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இப்படத்தை இயக்கியுள்ளார்.

ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், யாஷ் ராவணன் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

மேலும் சன்னி தியோல், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 6-ம் திகதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

அதேபோல், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல், ‘ராமாயணா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Post a Comment