நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், இருவரும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது விஜய் தெரிவித்த கருத்து இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ராஷ்மிகா 100 முறைக்கும் மேல் கேட்டதாக விஜய் தேவரகொண்டா கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவரது இந்தக் கருத்து ராஷ்மிகாவை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதனால் விஜயின் பேச்சு தொடர்பாக இணையத்தில் விவாதம் எழுந்துள்ளது.
