நடிகர் சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 25ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளது.
துபாயிலுள்ள சிலிகான் சென்ட்ரல் மாலில் மாலை 6 மணிக்கு இந்த விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியாகியுள்ள ‘ஆத்தி யார்ரா இவ’, ‘ஏரோபிளேன்’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.
இத்திரைப்படம் நவம்பர் 6ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
