பேசுவோர் பேசட்டும், விமர்சிப்போர் விமர்சிக்கட்டும்!” – விமர்சனங்களுக்கு பதிலடி

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் கலந்துகொண்டிருந்தார். அப்போது பிரியா அணிந்திருந்த உடையில் ‘ஆனந்தின் ஆதரவாளர்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இந்த வாசகம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றதுடன், பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் அட்லீ தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், தன்னைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டதுடன், சிலர் தன்னை விமர்சித்தாலும், தன்னை கதாநாயகனாக நடிக்க அழைத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தான் பெருமையாகக் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆனந்த் அம்பானியுடனான தனது நட்பு குறித்து பேசிய அட்லீ, ஆனந்த் அம்பானி தனது நண்பர் என்றும், மும்பையில் தன்னை அன்புடன் அழைத்துச் சென்றவர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம் என்றும், அனைவருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்த அட்லீ, பேசுபவர்கள் பேசட்டும், விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும் எனக் கூறியுள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் தனது பதில் எப்போதும் தனது திரைப்படங்களாகவே இருந்துள்ளதாகவும், இனியும் தனது படங்களின் மூலமே பதிலளிப்பேன் என்றும் அட்லீ தெரிவித்துள்ளார்.

Post a Comment