அனிருத் – காவ்யா மாறன் திருமணப் பேச்சு தீவிரம்

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு கலாநிதி மாறன் திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனைத் திருமணம் செய்யவுள்ளதாகக் கடந்த சில மாதங்களாக செய்திகள் பரவி வருகின்றன.

இதற்கிடையில், நடிகை குட்டி பத்மினி மற்றும் நடிகர் Y.G. மகேந்திரன் ஆகியோர் நேர்காணல் ஒன்றில் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், திருமணம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

மேலும், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கலாநிதி மாறன் தனது மகளின் திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியைச் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகின.

தற்போது தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

இதேவேளை, நவம்பர் 11ஆம் திகதி கிரீஸில் திருமணமும், நவம்பர் 14ஆம் திகதி சென்னையில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்வும் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் அதன் திகதிகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகியுள்ளதா என்பது தெளிவாகவில்லை. எனவே, தற்போது வெளியாகும் தகவல்களை உறுதிப்படுத்தப்படாத செய்திகளாகவே கருத வேண்டும்

Post a Comment