முதலமைச்சர் விஜய் தோளில் கதறி அழுத ஸ்ரீகாந்த்

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா, இன்று (17) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 76.

இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அத்துடன், தேவாவின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக, இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Post a Comment