தனக்கே கட்டிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பிரபல நடிகர்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
மாரடைப்பால் காலமான நடிகர் ராஜேஷின் உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அவரது பெற்றோர், மனைவி அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ராஜேஷ், 75. 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் மாரடைப்பால் திடீரென நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. சென்னை, ராமாபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ராஜேஷின் மகள் கனடாவில் இருந்து இன்று அதிகாலை தான் சென்னை திரும்பினார். பிரபலங்கள் அஞ்சலிக்கு பின் இறுதி அஞ்சலி சென்னை அசோக் நகரில் உள்ள தேவாலயத்தில் நடந்தது. இதையடுத்து மாலை 3 மணிக்கு மேல் ராஜேஷின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது பெற்றோர், மனைவி கல்லறை அமைந்துள்ள இடத்திலேயே ராஜேஷின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக ராஜேஷ், உயிரோடு இருக்கும் போதே தனக்கான கல்லறையை கட்டி வைத்திருந்தார். தனது உடல் அடக்கம் இப்படிதான் நடக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படியே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அதை முறுக்கி விட்டு திரையில் மிரட்ட தயாராகும் சிவகார்த்திகேயன்! எந்த படத்துல தெரியுமா?
சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. க்ளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன் போலீஸ் போல அந்த கெட்டப்பில் இருக்கின்றார். இதை வைத்து இந்த கெட்டப் சிவகார்த்திகேயன் மதராஸி படத்திற்காக தான் போட்டுள்ளார் என பேசி வருகின்றனர்
சிவகார்த்திகேயன் தற்போது தான் மதராஸி படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இலங்கையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளதாம். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முறுக்கு மீசை கெட்டப்பில் சிவகார்த்திகேயன் செம மிரட்டலாக இருக்கின்றார்.
மேலும் அவர் மதராஸி படத்திற்காக தான் இந்த லுக்கிற்கு மாறியிருக்கிறார் என சொல்லப்படுகின்றது.
ஏற்கனவே வெளியான மதராஸி பட போஸ்டர்ஸ் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோக்களில் சிவகார்த்திகேயன் தாடி மீசை உடன் இருக்கும் கெட்டப்பில் தான் இருந்தார். மேலும் சமீபத்தில் நாயகி ருக்மிணி வசந்த் கூட மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் கெட்டப் ஹைலைட்டாக இருக்கும் என கூறியிருந்தார்.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரின் சமூக வலைத்தள பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
ஹனியா அமிர், மஹிரா கான் உள்ளிட்ட பல பாகிஸ்தான் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இவர்களை பின்தொடர்பவர்களால் அவர்களின் இன்ஸ்டா பக்கங்களை அணுக முடியவில்லை.
பாகிஸ்தானிய பிரபலங்கள் அலி ஜாபர், சனம் சயீத், பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், இம்ரான் அப்பாஸ், சஜல் அலி ஆகியோரின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயி் அக்தர் உடையது உட்பட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
நரசிம்மா படத்தில் இடம் பெற்ற லாலா நந்த லாலா.. வா.. வா.. என்ற பாடலில் வாழை போல் வழுக்கும் உடலடி.. வா என்னும் வயசடி.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ரம்யா கிருஷ்ணனின் ஆடும் கவர்ச்சி ஆட்டத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
அந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப பதின்ம வயசில் பருவ மொட்டாக தளதளவென செழிப்பாக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியுள்ள புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணைய பக்கங்களில் திடீரென ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனை பார்த்த சில ரசிகர்கள், ரம்யா கிருஷ்ணனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் மறக்க முடியாத பெயர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 90-களில் லட்சக்கணக்காக இளசுகளின் இரவுகளை கொள்ளை அடித்த இவர் ‘பாகுபலி’ படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக தனது நடிப்பால் உலக அளவில் புகழ் பெற்றவர்.
இந்த கதாபாத்திரத்திற்கு ரம்யாவை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. 1985-ல் தனது 15-வது வயதில் ‘வெள்ளை மனசு’ படத்தில் அறிமுகமான ரம்யா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தற்போது 53 வயதாகும் இவர், குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்.
ரம்யா கிருஷ்ணனின் ஆரம்ப கால வாழ்க்கை, அவரது கவர்ச்சியான தோற்றத்திற்கு பெரும் வரவேற்பை பெற்றது. 1989-ல் வெளியான ‘Paila Pacheesu’ என்ற தெலுங்கு படத்தில், நடிகை டிஸ்கோ சாந்தியுடன் நீச்சல் உடையில் தோன்றிய காட்சி, அந்த காலத்தில் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இந்த புகைப்படம், ரம்யாவின் துணிச்சலான நடிப்பு தேர்வுகளை வெளிப்படுத்துகிறது. அக்காலத்தில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பது தைரியமான முடிவாக இருந்தது, மேலும் இது ரம்யாவின் பன்முகத்தன்மையை பறைசாற்றியது. இந்த புகைப்படம் இன்று மீண்டும் வெளியாகி, சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ரம்யாவின் இளமை தோற்றமும், அவரது கவர்ச்சியான பாணியும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. ஆனால், இதுபோன்ற காட்சிகள் அக்காலத்தில் சாதாரணமாக இருந்தாலும், இன்றைய காலத்தில் சிலர் இதை விமர்சிக்கின்றனர்.
ரம்யா கிருஷ்ணனின் இந்த தோற்றம், அவரது தொழில்முறை அர்ப்பணிப்பையும், புதிய முயற்சிகளுக்கு தயங்காத தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. இன்று முதிர்ந்த வேடங்களில் மிளிரும் ரம்யா, தனது ஆரம்ப கால கவர்ச்சி பாத்திரங்கள் மூலமும் தனித்துவமான முத்திரையை பதித்தவர்.
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு ஒரு விஷயம் புலப்பட்டிருக்கும்.
குறிப்பாக வீரதீர சாகாச விளையாட்டுகள் நடத்துகிறோம் என்ற பெயரில் சீரியல் நடிகைகளை லெக்கின்ஸ் பேன்ட் அணிய வைத்து சேற்றில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது போலவும்.
படியே இல்லாத சாய்வான பரப்பில் கயிறை பிடித்துக் கொண்டு மேலே ஏறுவது போலவும்.
மேலே ஏறும் போது கீழே இருந்து தண்ணீரை அவர்களின் மீது பீய்ச்சி அடித்து அவர்களின் ஆடையை தொப்பலாக நனைய வைத்து கோக்குமாக்கான டாஸ்க்குகளை கொடுத்து விதவிதமான கோணங்களில் படமாக்கி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வதை பார்த்திருப்பீர்கள்.
இவை எதுவும் வேண்டுமென்றோ அல்லது தெரியாத்தனமாகவோ படமாக்கப்பட்டவை அல்ல என்பது நிதர்சனம்.
அது போலத்தான் பிரபல சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின் சமீபத்தில் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் புடவை அணிந்து கொண்டு கயிற்றில் ஏறும் ஒரு டாஸ்க் ஈடுபடுகிறார் அம்மணி.
ஏற்கனவே இப்படியான விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வருகிறார் பிரியங்கா ஜெயின் என்ற புகார் இவர் மீது இருக்கிறது. இந்நிலையில், புடவை அணிந்து கொண்டு மங்களகரமாக வந்திருந்தார் அம்மணி.
ஆனால், கயிறு ஏறும் டாஸ்க்கின் போது திடீரென அம்மணி வழுக்கி விழ அவருடைய புடவை தொடைக்கு மேல் ஏறிவிட்டது. ஒருவேளை, இது எதேர்ச்சையாக, தெரியாமல் நடந்தது என்றால் அந்த காட்சியை ஒளிபரப்பும் போது எடிட் செய்து நீக்கி இருக்கலாம்.
அப்படி எதையும் நீக்காமல் அப்படியே ஒளிபரப்பு செய்கிறது அந்த தொலைக்காட்சி. இந்நிலையில், அந்த வீடியோ காட்சிகள் இணைய பக்கங்களில் தீயாக பரவி வருகின்றது.
தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்தால் கூட இந்த அளவுக்கு ஆபாசமாக இருந்திருக்காது. ஆனால், புடவை அணிந்து கொண்டு இப்படி தொடை தெரியும் அளவுக்கு விளையாடும் போது பார்க்க அருவருப்பாக இருக்கிறது என்பது பொதுவான நெட்டிசன்களின் கருத்தாக இருக்கிறது.
அதே சமயம், அம்மணியின் தொடையழகை வர்ணித்து கவிதைகளை எழுதும் இணையவாசிகளும் இருக்கவே செய்கிறார்கள்.
நடிகர் நெப்போலியன் மகனின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயோபதி மருத்துவமனை மருத்துவர் டேனியல் ராஜா திருநெல்வேலி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, “நான் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் அவர்கள் நடத்தி வரும் ஜீவன் அறக்கட்டளை மயோபதி மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன்.
எங்களது நிறுவனத் தலைவர் நெப்போலியன் அவர்களுடைய மூத்த மகன் தனுஷ் அவர்கள் குடும்ப வாழ்க்கை குறித்தும், அவருடைய உடல்நிலை குறித்தும் தவறான செய்திகள் தொடர்ந்து வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
கருப்பு டீ-சர்ட், பிங்க் ட்ராக் பேண்ட்.. இளம் நடிகைகளுக்கு சவால் விடும் நடிகை ரோஜா.. (படங்கள்)
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா செல்வமணி, தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் YSR காங்கிரஸ் கட்சி அரசியல்வாதியாகவும், நாகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பரபரப்பாக இயங்கி வருகிறார்.
51 வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்கும் ரோஜா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ மற்றும் புகைப்படங்கள், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் பிங்க் நிற ட்ராக் பேண்ட் அணிந்து, டம்பெல்களுடன் உடற்பயிற்சி செய்யும் இந்த வீடியோவில், ரோஜாவின் உடல் தகுதியும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் தெளிவாக வெளிப்படுகின்றன.
இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில், அவரது இளமை ததும்பும் தோற்றமும், உற்சாகமான அணுகுமுறையும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. “51 வயதிலும் இப்படியா?” என்று ரசிகர்கள் வியந்து, சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ரோஜாவின் இந்த உடற்பயிற்சி வீடியோ, ஆரோக்கியத்திற்கு வயது தடையில்லை என்பதை உணர்த்துவதுடன், பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
திரையுலகில் இருந்து அரசியல் வரை தனது பயணத்தில், எப்போதும் லைம்லைட்டில் இருக்கும் ரோஜா, இந்த வீடியோ மூலம் மீண்டும் தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அவரது இந்த முயற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்புவோருக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.
தங்கம் விக்கிற விலையில.. தங்கத்துல ப்ரா.. தை ஹை ஸ்லிட்.. போட்டு பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரீ பட நடிகை..!
மலையாள திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் கவனம்பெறும் கதாபாத்திரங்களால் பிரபலமான நடிகை சானியா ஐயப்பன், தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல தனது இடத்தைப் பிடித்து வருகிறார்.
வெறும் 23 வயதில், தனது தெளிவான கதைத் தேர்வு மற்றும் பல்துறை திறமைகளால், தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20, 2025 அன்று தனது 23-வது பிறந்தநாளை நெருங்கிய நண்பர்களுடன் ஒரு தனியார் ரிசார்ட்டில் கொண்டாடிய சானியா, தனது கிளாமரான தோற்றத்தால் இணையத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
அவரது தங்க முலாம் பூசப்பட்ட ஜாக்கெட், இந்த கொண்டாட்டத்தின் மையப் பொருளாக மாறியது. இந்தக் கட்டுரையில், சானியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், அவரது திரைப்பயணம், மற்றும் இந்த வைரல் தோற்றம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
சானியா ஐயப்பன், சிறு வயதிலேயே திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர். 2014-ல் பால்யகாலசகி என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், 2018-ல் குயின் படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார்.
தமிழில், 2023-ல் வெளியான இறுகப்பற்று மற்றும் 2024-ல் வெளியான சொர்க்கவாசல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டவை, குறிப்பாக இறுகப்பற்று இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த “பீல் குட்” படமாக உள்ளது.
சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குறும்படங்கள், மற்றும் வெப் சீரிஸ்களில் தனது திறமையை வெளிப்படுத்திய சானியா, தனது கதைத் தேர்வில் தெளிவான பார்வை கொண்டவர் என்பதை நிரூபித்துள்ளார்.
சானியா ஐயப்பன், ஏப்ரல் 20, 2025 அன்று தனது 23-வது பிறந்தநாளை, நெருங்கிய நண்பர்களான அபர்ணா தாமஸ், ஜீவா, கேப்ரி உள்ளிட்டோருடன் ஒரு தனியார் ரிசார்ட்டில் கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில், அவர் கேக் வெட்டி, நண்பர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். ஆனால், இந்தக் கொண்டாட்டத்தின் மையப் பொருளாக அமைந்தது, அவர் அணிந்திருந்த கிளாமரான தோற்றமும், குறிப்பாக தங்க முலாம் பூசப்பட்டதாகத் தோன்றிய மெட்டாலிக் ஜாக்கெட்.
சானியாவின் இந்த தங்க நிற ஜாக்கெட், ஆழமான கழுத்து வடிவமைப்பு மற்றும் தை-ஹை ஸ்லிட் கொண்ட பாணியில், அவரது உடல் அமைப்பை அழகாக வெளிப்படுத்தியது.
இந்த உடை, இளம் நடிகைகளுக்கு இணையாக, அவரது தைரியமான பேஷன் அணுகுமுறையை வெளிப்படுத்தியது. இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டவுடன், இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. “தங்கம் விக்கிற விலைக்கு சானியா தங்க ஜாக்கெட் போட்டு பிறந்தநாள் கொண்டாடுறாங்க!” என்று சிலர் வியந்து கருத்து தெரிவித்தனர்.
சூப்பர் குட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுப்பிரமணி பின்னர் நடிகர் ஆனார். சூப்பர் குட் சுப்பிரமணி என்ற பெயரில் பல படங்களில் நடித்தார். முண்டாசுப்பட்டி, கன்னி மாடம், காவல்துறை உங்கள் நண்பன், ஜெய்பீம், ஆனந்தம் விளையாடும் வீடு, பிஸ்தா, பரமன் உள்பட பல படங்களில் நடித்தார். சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்தார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது 4ம் நிலை புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அவர் மருத்துவ செலவிற்கும், குடும்ப செலவிற்கும் நண்பர்களை கொண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி கேட்டு வருகிறார்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் கார்த்தி, ரவி மோகன் இரண்டு பேரும் நடித்தனர். அப்போதிலிருந்து நெருங்கிய நண்பர்களாகிவிட்ட அவர்கள் தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி சென்றுள்ளார்கள்.
நடிகர் ரவி மோகன் கடந்தாண்டு மலையாள நடிகர் ஜெயராமுடன் இணைந்து சபரிமலைக்கு சென்று இருந்தார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு அவரும், கார்த்தியும் இணைந்து சபரிமலைக்கு சென்றுள்ளார்கள். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்கள்.
அவர்கள் இருவரையும் கொச்சின் விமான நிலையத்தில் மலையாள நடிகர் திலீப் சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
குரலழகி பிரியங்கா கணவர் வசி ஈழத்தமிழர் ஆ! பிரியங்காவின் ரசிகர்கள் மகிழ்ச்சி.
பிரியங்காவின் அம்மாதான், மகளின் எதிர்காலம் நினைத்து கவலைப்பட்டு, திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.. அம்மாவின் பேச்சை தட்ட முடியாமல் பிரியங்காவும் ஒப்புக் கொண்டுள்ளார். பிரியங்கா திருமணம் செய்துள்ள வசி என்பவர் ஈழத்தமிழர்.. லண்டனில் புகழ்பெற்ற இசைக்குழு வைத்திருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.. அத்துடன், விஜய் குறித்தும் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் தமிழா தமிழா பாண்டியன். அதில், விஜய் டிவி பிரியங்காவின் 2வது திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.. பிரியங்கா திருமணம் செய்துள்ள வசி என்பவர் ஈழத்தமிழராம்.. இவர் லண்டனில் குடியிருந்து வருவதால், பிரியங்காவும் திருமணத்துக்கு பிறகு லண்டன் சென்று தங்கிவிடுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழா தமிழா பாண்டியன் மீண்டும் விஜய் பற்றி பேசி பதில் தந்துள்ளார்..
வசி ஒரு ஈழத்தமிழர்.. லண்டனில் வசித்து வருகிறார்.. லண்டனிலேயே அவருக்கு குடும்பம் உள்ளது.. இசைக்குழுவை லண்டனில் வைத்து நடத்தி வருகிறார்.. வசியின் அண்ணனும் இதே இசைக்குழுவில்தான் உள்ளார
ஐரோப்பாவிலேயே மிகவும் பிரபலமானது இவர்களின் இசைக்குழு.. அதற்காக பிரியங்கா திருமணத்துக்க பிறகு லண்டனில் செட்டில் ஆகிவிடுவாரா என்று சொல்ல முடியாது.
அஜித் பட வில்லன் நடிகர் என்னிடம் பாலியல் ரீதியில் அத்து மீறினார்-பிரபல நடிகை பரபரப்பு குற்றசாட்டு..!
அஜித்குமார் நடிப்பில் அண்மையில் வெளியான குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோசியஸ் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மலையாளத் திரையுலகில் பெண்கள் வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை, கடந்த வருடம் கேரளாவில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை உறுதி செய்தது.
அத்துடன்,போதைப் பொருள் கலாச்சாரமும் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தது.
அண்மையில், கோழிக்கோடு பகுதியில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தில், பிரபல நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகியோருக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், இளம் நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் இதை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக, தனது படங்களில் போதை மருந்து பயன்படுத்திய நடிகரால் தனக்கு ஏற்பட்டு அனுபவம் குறித்து அது அதிர்ச்சிகரமான தகவலை வெளிப்படுத்தி உள்ளார்.
மலையாளத்தில் விக்ருதி, ஜன கன மன, சவுதி வெள்ளக்கா உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான இவர், . 2023ல் வெளியான ரேகா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா அரசு விருது மற்றும் பிலிம்பேர் விருது இரண்டையும் பெற்றவர்.
இது குறித்து வின்சி அலோசியஸ் மேலும் பேசுகையில்,
“சம்பந்தப்பட்ட நடிகரின் பெயரை குறிப்பிடாமல், நான் ஒரு படத்தில் பணியாற்றியபோது அந்த படத்தில் முக்கிய நடிகராக நடித்தவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார்.
ஒரு முறை நான் அணிந்திருந்த ஆடையில் ஒரு சிறிய பிரச்னை என்பதால் அதை சரி செய்வதற்காக ஒரு தனி அறைக்கு செல்ல முற்பட்டேன். அப்போது நானும் கூடவே வந்து உதவி செய்கிறேன் என என்னுடன் வர முற்பட்டார்.
அது மட்டுமல்ல இன்னொரு நாள் ஒரு பாடல் காட்சிக்கான ரிகர்சலின் போது திடீரென அவரது உதட்டில் இருந்து வெள்ளையான நிறம் கொண்ட பொருள் வெளிப்பட்டது. அப்போதே எனக்கு அவர் போதை பொருள் பயன்படுத்தி இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.
அதனால் இனிமேல் போதை பொருள் பயன்படுத்துபவர்களுடன் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கை முடிவாகவே எடுத்துள்ளேன்” என்று கூறியிருந்தார்.
அந்த நடிகர் யாராக இருக்கும் என்று சந்தேகம் எழுந்து வந்த நிலையில், போதைப் பொருளை பயன்படுத்தி விட்டு, தன்னிடம் அத்துமீறியதாக ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோசியஸ் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு குறித்து விசாரிக்க, அன்சிபா ஹாசன், வினு மோகன் மற்றம் சாராயு மோகன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முதலில் சாக்கோவிடம் கருத்து கேட்கப்படும் என்று விசாரணை குழுவினர் தெரிவித்துள்ளனர். சாக்கோ இதற்கு முன்பு ஆலப்புழா போதைப்பொருள் விவகாரத்திலும் சம்பந்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஷைன் டாம் சாக்கோ அண்மையில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா தேஷ்பாண்டே, சின்னத்திரை ரசிகர்களுக்கு இவரைப்பற்றிய எந்த ஒரு அறிமுகமும் சொல்ல வேண்டியது இல்லை.
எந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் செம கலகலப்பாக கொண்டு செல்வார். விருது விழாக்களை கூட செம கூலாக நடத்துவார்.
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், ஆனால் 6 வருடங்களில் அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
விவாகரத்திற்கு பிறகு தனது அம்மாவுடன் வசித்து வந்த பிரியங்கா எந்த ஒரு சத்தமும் இல்லாமல் டிஜே வசி என்பவரை நேற்று (16) திருமணம் செய்துகொண்டார்.
அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர். பிரியங்காவிற்கும் அவரது கணவர் வசிக்கும் 10 வயது வித்தியாசம் உள்ளதாம்.
வசிக்கு 42 வயதாம், தொகுப்பாளினி பிரியங்காவிற்கு 32 வயது.




.jpg)
.jpeg)
.jpeg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpeg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)


.jpeg)