இன்று மாலை வெளியாகிறது ”கருப்பா கூட வா” பாடல்!

இன்று மாலை வெளியாகிறது ”கருப்பா கூட வா” பாடல்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு.” பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் திகதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் வருகிற அதாவது மே மாதம் 14 ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள “கருப்பு” படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதனிடையே, ‘கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களில் 3 பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த பாடல் அப்டேட்டை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கருப்புசாமியை நம்பும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருக்கப் போகும்

“கருப்பா கூட வா” பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. இதை எப்போதெல்லாம் கேட்கிறேனோ, அப்போதெல்லாம் எனக்கு மெய்சிலிர்த்துவிடுகிறது!!! என்று கூறியுள்ளார்.

About the Author

You may like these posts

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.