தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்களில் ஒருவர் தான் ஜி.வி.பிரகாஷ்.
இளம் வயதிலேயே இசைத்துறையில் அறிமுகமானவர் இசையமைப்பாளராக களமிறங்கி நிறைய வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்துள்ளார். இசையமைப்பாளராக கலக்கி வந்தவர் நடிகராகவும் தன்னை நிரூபித்து வருகிறார்.
சினிமாவை தாண்டி சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார், தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
பல படங்களுக்கு பணம் வாங்காமலேயே பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படத்திற்கு பணம் வாங்காமலேயே இசையமைத்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சினிமா பயணத்தில் கடைபிடிக்கும் முக்கிய விஷயம் குறித்து பேசியுள்ளார்.
