இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள ’29’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘பொல்லாத ஆசைகள்’ எனத் தொடங்கும் பாடல் வரும் ஏப்.27-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் மே 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
